--- --:--:-- --

ஆபத்தான நிலையில் ஆனந்தூர் நூலக கட்டிடம்..அச்சமடைந்த வாசகர்கள்..!

2

ஆனந்தூர் நூலக கட்டிடம் ஆபத்தான முறையில் உள்ளதை சீரமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, ஆனந்தூரில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது.

 

இந்த நூலகம் அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது, மழைக்காலங்களில் நூலக கட்டிடம் ஒழுகுவதாகவும் அதனால் புத்தகங்கள் நீரில் நனைந்து பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

மேலும் நூலகர் காலையில் திறந்து வைத்துவிட்டு மாலை நூலக நேரம் முடிந்த பிறகு பூட்டி விட்டு செல்வதும் இடைப்பட்ட நேரத்தில் வருவதில்லை இதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தனர். கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் ஆபத்தை உணர்ந்த வாசகர்கள் நூலகத்திற்கு  வருவதில்லை.

 

அதனால் எப்பொழுதும் வாசகர்கள் இல்லாமல் காலியாகவே உள்ளது. நூலக கட்டிடத்தை சீரமைத் தர வேண்டும் என இப்போது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon