--- --:--:-- --

காதலியின் ஆபாச புகைப்படத்தை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்..அதிர்ச்சியடைந்த காதலன்..!

2

கடந்த ஜூலை 3ம் தேதி அன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AVP லே அவுட்டில், கணக்கம்பாளையம் பிரிவு, கல்லாங்காடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற அன்பு (23) என்பவர் தனது தோழியின் ஆபாச புகைப்படத்தை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததை மர்ம நபர்கள் அவருக்கே தெரியாமல் தங்களது செல்போனிற்கு பரிமாற்றம் செய்துகொண்டு பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பவரின் மகன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அருவாள் போன்ற கொடிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.

 

இது தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

அவர்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் .சு.லட்சுமி, ஆணையிட்டுள்ளார்.

 

கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித் (22), என்பவரை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செப்டம்பர் 9ம் தேதி ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 74 நபர்கள் 2024-ம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon