60 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்..ரத்த வெள்ளத்தில் பலி..!
திருப்பத்தூர் அருகே ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி 60 அடி பள்ளத்தில் விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூர் அடுத்த பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தனது தம்பியின் மனைவி அனிதாவுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
ஜோலார்பேட்டை அடுத்த தாங்குநேரி மேம்பால தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோதி 60 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்த வனிதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த பெருமாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





