ரவி சாஸ்திரி ஆலோசனையே காரணம்: ரிஷப் பண்ட்
ரவி சாஸ்திரியின் ஆலோசனையால் தான், ஆஃப் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில், ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஷாட்டுகளை அடிக்கும்போது அவுட்டாகி விடுவேன் எனக் குறிப்பிட்ட அவர், அப்போது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை ஆடுமாறு ரவி சாஸ்திரி யோசனை வழங்கியதாக தெரிவித்தார். மேலும், ஆஃப் ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ளவும் அவர் ஐடியா வழங்கியதாக பண்ட் கூறியுள்ளார்.





