சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு..!
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மகாவிஷ்ணுவை, சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் அறிவியலுக்கு முரணான வகையில் சர்ச்சையாக பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
மகாவிஷ்ணுவின் ஆவதாரமாக கருதி, மாணவர்கள் மத்தியில் அறிவியலுக்கு முரணான கருத்துகளை விதைத்து, சிக்கலில் சிக்கியுள்ளார் இளைஞர் மாகாவிஷ்ணு.பூதாகரமாக வெடித்த இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு தலைமறைவாகி விட்டதாக நெட்டிசன்கள் சாடினர். ஆனால், நான் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை என வீடியோ வெளியிட்டிருந்த மறுநாளே, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




