தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவி தற்கொலை..!
டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவி உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயம்பாக்கத்தைச் சேர்ந்த அமர்தவர்ஷினி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தவர் வகுப்புக்கு வராத காரணத்தால் சக மாணவிகள் அவரை அழைத்து சென்றனர். அப்பொழுது அவர் தூக்கில் தொங்கி இருந்தபடி உயிரிழந்து கிடந்தார். மாணவியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மாணவி அமிர்தவர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் எந்த காரணத்திற்காக அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





