கார் உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
கொடைக்கானலில் இரவு வேளையில் சாலையில் சண்டையிட்டு கொண்ட தெரு நாய்கள் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த தனது ஹோண்டா கார் மீது ஏறி நகத்தால் கீரியும் சேதப்படுத்தியதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நாய்களை விரட்ட முயன்ற பொழுது தம்மை துரத்தி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக நகர பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.






