பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து திருப்பூரில் பாலியல் தொழில்..!
திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி, பொன்கோவில் நகர் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் தனது மனைவியை வைத்து பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து திருப்பூர் மற்றும் பிற பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி 11.15 மணியளவில், நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அவர்களது வீட்டில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டபோது மூன்று காவலர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணின் கணவரையும், அவர்களுடைய தொலைபேசிகளையும் பிடுங்கிக்கொண்டு ஒரு லட்சம் பணம் கொடுத்தால் கணவரை விட்டு விடுவதாக கூறி காரில் கடத்திச் சென்றனர்.
பின்னர் பவித்ரனின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை செய்து தேடி சென்றபோது பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பவித்ரனையும், ஈரோட்டை சேர்ந்த தனபால் சிங் 47), முருகன்(42) என்பவர்களையும் அடைத்து வைத்திருந்தனர்.
மேலும் அவர்களை அடைத்து வைத்திருந்த காவலர்கள் சோமசுந்தரம் (33), லட்சுமணன்(32) ஆகியோரையும் மற்றும் ஜெயராமன் (20), அருண்குமார்(24), ஹரிஷ் (25) ஆகியோரையும் கைது செய்தனர். இது தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இது தொடர்பாக துரிதமாக செயல்பட்டு அவர்களை கைது செய்த இரவு ரோந்து பொறுப்பு அதிகாரி மாநகர் குற்ற பதிவேடுகள் கூடம் காவல் உதவி ஆணையர் செங்குட்டுவன், மத்திய குற்ற பிரிவு காவல்நிலைய காவல் ஆய்வாளர் கவிதா, நல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரஞ்சோதி, காவலர் பாலாஜி மற்றும் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் வெள்ளைசாமி ஆகியோரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, வெகுவாக பாராட்டினார்கள்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி இன்று (22.8.2024) மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் தினசரி பெறப்படும் கோரிக்கைகள், நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் துணை மேயர் ரா. பாலசுப்பிரமணியம், வடக்கு மாநகர துணை ஆணையாளர் சுஜாதா, தெற்கு மாநகர துணை ஆணையாளர் யாதவ் அசோக் கிரிஷ், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.






