டாஸ்மாக்கை திறக்க வேண்டும் என போராடிய பெண்கள்..!
தர்மபுரியில் மது கடை திறக்க பணம் கொடுத்த பெண்களை போராட வைத்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மேலாளர் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு வலியுறுத்தியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் எதற்காக என்று சொல்லாமல் 300 ரூபாய் கொடுத்து பெண்களை அழைத்துச் சென்று மதுக்கடைக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட வைத்தது அசிங்கம் என்று கூறினார்.
இல்லாத ஒன்றை இருப்பது போன்று காட்டும் முயற்சியை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்த பாலு, இதேபோன்றுதான் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில் அதிக இடங்களை பெறுகிறார்கள் என்று தவறான தோற்றத்தை ஏற்படுத்த முடிவதாக குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





