கேரள அரசுக்கு உறுதி அளித்த பிரதமர்..!
கேரள அரசுக்கு மத்திய அரசு துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சம்பவம் நடந்த உடனே கேரள CM உடன் பேசியதாகவும், NDRF, SDRF, ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உடனே செய்ததாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறிய பிரதமர், பணத்தால் எந்த பணிகளும் தடைபடாது எனவும் உறுதி அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




