--- --:--:-- --

மின்சார ஒயர் திருட்டு..திருட்டில் 3 மணிகண்டன்..!

2

அரியலூரில் மின்சார ஒயர்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரே பெயர் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. செந்துறை அருகே பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார் தனது வயலில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக மின்மோட்டார் வைத்துள்ளார்.

 

இந்த நிலையில் அங்கு சென்ற மூன்று நபர்கள் மோட்டார் அருகே இருந்த மின்சார ஓயர்களை திருடியுள்ளனர். அங்கிருந்த அவர்கள் விவசாயி குமாரும் மற்றும் அவரது உறவினர்கள் மூவரில் இருவரை விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

விசாரணையில் ஒருவர் தனது பெயர் மணிகண்டன் என்றும் செந்துறை சமத்துவபுரத்தில் வசிப்பதாகவும் கூறியிருக்கிறார். மற்றொருவரின் பெயரும் மணிகண்டனாக இருக்க தப்பியோடியவர் குறித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

 

அப்பொழுது அந்த நபரும் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு பேரையும் கைது செய்து காவல் துறையினர் தம்பியுடைய மூன்றாவது மணிகண்டனை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon