--- --:--:-- --

ஏடிஎம்மில் கட்டு கட்டாக சிக்கிய பணம்..!

11

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் தவறவிடப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் பணம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பொழுது ஊழியர்கள் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை தவறுதலாக ஏடிஎம் மிஷினின் பின்புறம் வைத்துவிட்டனர்.

 

23ஆம் தேதி இரவு ஒன்றரை மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அப்துல்லா ஏடிஎம் மையத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட பொழுது பணம் இருப்பதை கண்டறிந்தார். தொடர்ந்து மூன்று லட்சம் ரூபாய் பணம் காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு பிறகு வாங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon