பெட்ரோல் நிரப்பும் பொழுது தீ விபத்து..!
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் நிரப்பும் பொழுது தீ பிடித்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் மூன்று வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தால் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பெட்ரோல் கலந்த நீர் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள கால்வாயில் சென்ற பொழுது அங்கு தீ பற்றி எரிந்து பெட்ரோல் பங்க் வரை பரவியதாக கூறப்படுகிறது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





