பேனரால் கரூரில் வெடித்த கலவரம்..!
குளித்தலை அருகே இரு வேறு சமூகத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 42 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் 9 பேரை கைது செய்தனர். கரூர் மாவட்டம் கோயில் குடமுலுக்கலுக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது.
இதில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
மேலும் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மகன் உட்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு சமூகத்தினர் அளித்த புகாரின் பேரில் 12 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





