--- --:--:-- --

ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்து போராடும் விவசாயிகள்..!

8

தஞ்சையில் காவிரியில் இருந்து தண்ணீரை திறக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை உடனடியாக திறந்து விடப்படுகிறது. நான்கு மாதங்கள் ஆகியும் தற்போது வரை நடவு மானியம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

 

மேலும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon