திருமணமான 7 மாதத்தில் மனைவி எடுத்த முடிவு..!
சங்கரன்கோவில் அருகே திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் அரசு மருத்துவரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கனிகட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் சட்டப் படிப்பு முடித்த சௌமியா என்பவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணமானதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தங்கள் தங்கி இருந்த வாடகை வீட்டில் சௌமியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





