தலைக்கு ஏறிய போதை.. தாயை அடித்து கொலை செய்த வளர்ப்பு மகன்..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கண்டித்த தாயை அடித்து கொலை செய்ததாக அவரது வளர்ப்பு மகன் கைது செய்யப்பட்டார். குப்புசாமி – ஜெயா தம்பதிக்கு குழந்தை இல்லாததால் தினேஷ் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய தினேஷ் மது போதையில் இறங்கி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்டித்த தாய் ஜெயாவை தினேஷ் தாக்கியதில் மயக்கம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





