--- --:--:-- --

பால்கனி கீழே விழுந்ததால் நடந்த விபரீத சம்பவம்..!

10

சென்னை வடபழனியில் முதல் தல பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் பூ வியாபாரி உயிரிழந்தார். சுமார் 25 ஆண்டுகளான 6 மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த வரலட்சுமி என்ற பெண் அந்த வழியாக சென்ற பூ வியாபாரியை கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பூ வாங்குவதற்காக பால்கனியில் இருந்தபடியே கயிறு கட்டி கூடையை கீழே போட்டுள்ளார்.

 

பால்கனி மீது வரலட்சுமி சாயும் பொழுது சுவர் இடிந்து கீழே நின்றிருந்த பூ வியாபாரியின் தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே கிருஷ்ணமூர்த்தி பலியான நிலையில் வரலட்சுமி கீழே விழுந்து காயமடைந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon