கண்டுகொள்ளாத அரசை பங்கமாய் கலாய்த்து பேனர் வைத்த கிராமம்..!
தேனியில் அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சிக்கு நன்றி தெரிவித்து நூதன முறையில் மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி நகராட்சியில் உள்ள மூன்றாவது வார்டில் கடந்த 21 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
மக்கள் சாக்கடை சிமெண்ட் சாலை மின்விளக்கு குடிநீர் இணைப்பு வசதிகள் அமைக்காமல் பழங்கால சின்னமாக தங்கள் திறமை பாதுகாத்துக் கொண்டிருக்கும் போடி நகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் மிக மிக நன்றி என குறிப்பிட்ட பேனர் வைத்துள்ளனர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே சாலையில் வைக்கப்பட்டுள்ள கற்களையும் பேனரையும் அகற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





