--- --:--:-- --

கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்..கெத்து காட்ட நினைத்தவர்களை தூக்கிய போலீசார்..!

9

சென்னையில் கத்தியுடன் கல்லூரிக்கு சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வடசென்னை, புது வண்ணாரப்பேட்டை டோல்கேட் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் குவிந்தனர்.

 

காவலர்களை கண்டதும் அவர்கள் ஓட்டம் பிடித்த நிலையில் நான்கு பேரை பிடித்து காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் பட்டாகத்தி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

விசாரணையில் அவர்கள் இசக்கி, எட்வின் பால், ஜனகன், குணசேகரன் பாலாஜி என்பது தெரியவந்தது. ரயில் நடைமேடையில் பட்டாக்கத்தியை தேய்த்து கெத்து காட்ட நினைத்ததையும் மாணவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Right Menu Icon