திருமணம் நிச்சயமான இளைஞர் திடீர் மாயம்..!
ஓமலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாயமான இளைஞரை போலீசார் மீட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
இந்த நிலையில் துணி எடுக்க சென்ற ரமேஷ் குமாரை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரையடுத்து சென்னையில் இருந்த ரமேஷ் குமாரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.





