34 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொலை.. 77 ஆயிரம் பேர் காயம்.. மீண்டும் செயல்படும் அடுமனைகள்..!
காசாவில் பாலஸ்தீனியர்கள் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் மருத்துவமனை அருகே 210 உடல்களை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் 77 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு காசா பகுதியில் உள்ள அடுமனைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் உதவி அமைப்பு கோதுமை மாவு உள்ளிட்ட தேவையான பொருட்களை வழங்கியுள்ள நிலையில் 170 நாட்களுக்கு பின் நான்கு அடுமனைகள் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உதவி பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்ய தேவையான முன்னெடுப்புகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் ஐநா உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





