--- --:--:-- --

தமிழகத்தில் சதம் அடித்த வெயில்..!

3

மிழ்நாட்டில் 14 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல், வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்தனர்.

 

வேலூர், கரூர் பரமத்தியில் தலா 107 டிகிரி, சேலம், திருச்சி, திருத்தணியில் தலா 106 டிகிரி, மதுரை, தருமபுரியில் தலா 106 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

 

கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்ததால் மக்கள் அவதி அடைந்தனர். இன்று அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் என்றும், ஏப்ரல் 22ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் முதல் – 107 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாக வாய்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 93 டிகிரி பாரன்ஹீட் – 102 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon