--- --:--:-- --

மார்பளவு தண்ணீரில் மூழ்கி பள்ளி சிறுவன் பலி..!

10

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றிலிருந்து 18 மாணவர்கள் நேற்று இரவு திற்பரப்புக்கு வந்துள்ளனர். பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர்.

 

அதில் ஒரு சிறுவனை மட்டும் திடீரென்று காணவில்லை. உடன் குளித்த நபர்கள் தேடிய பொழுது தண்ணீருக்குள் சுயநினைவின்றி மாணவர் கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

பலியான சிறுவன் சங்கரன்கோயிலை சேர்ந்த சமுத்திர பாண்டி என்பவன் மகன் ஐயப்பன் என்பது தெரிய வந்தது. தங்கள் உடன் ஜாலியாக சுற்றுலாவிற்கு வந்து சக மாணவன் இறந்து போனதால் மற்ற மாணவர்கள் கடும் வேதனை அடைந்தனர்.

 

 

அந்த நீச்சல் குளத்தில் மார்பளவு தண்ணீரே இருந்துள்ளது. அதில் சிறுவன் இறந்தது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon