கர்ப்பவாய் புற்றுநோய்.. அனைத்து பெண்களுக்கும் தடுப்பூசி : பிரதமர் மோடி
மரபுசாரா எரிபொருள் துறையில் இந்தியா துரிதமான முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் ஹைட்ரஜனாக இருக்கக்கூடிய படகு சேவையை தான் துவக்கி வைத்ததை நினைவு கூறும் பிரதமர் மோடி காசி மற்றும் அயோத்தியாவுக்கு இடையிலான வழித்தலங்களிலும் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகு சேவையை தொடங்க தான் திட்டமிட்டு இருப்பதாகவும் இதன் மூலம் தூய்மை கங்கை திட்டம் மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவித்தார்.
கர்ப்பவாய் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சிகளுக்கு விஞ்ஞானிகள் நிதி உதவி அளித்து அனைத்து பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்த விரும்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.





