--- --:--:-- --

பேருந்தில் லேசாக உரசிய பை..சரமாரியாக தாக்கிய பெண் காவலர்..!

10

அரக்கோணத்தில் பேருந்து பயணம் செய்த பயணியை தாக்கியதாக பெண் காவலரை கண்டித்து சகப் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரக்கோணம் நோக்கி சென்ற பேருந்தில் பெண் போக்குவரத்து காவலர் சரளா என்பவர் பயணம் செய்துள்ளார். அப்பொழுது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அருகில் இருந்த இளைஞரின் பெண் காவலர் மீது பை பட்டதாக கூறப்படுகிறது.

 

பெண் காவலர் அந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மன்னிப்பு கேட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon