--- --:--:-- --

திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்..!

11

முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இதன்பின் மீண்டும் நடிக்க துவங்கினார். நோயில் இருந்து மீண்டு வந்தாலும் கூட, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது அந்த புகைப்படங்களை கூட சமந்தா பதிவு செய்தார்.

 

அந்த சமயத்தில் அவர் குஷி படத்திலும் சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து வந்தார். இதில் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கும் போது திடீரென நடிகை சமந்தா மயங்கி விழுந்தார் என ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.

 

அதை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார் நடிகை சமந்தா. அதில் அவர் பேசும்போது “குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு சிட்டாடல் வெப் தொடரில் நடித்தேன்.

 

அந்த வெப் தொடரில் அதிகம் ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு மிகவும் கஷ்ட்டப்பட்டேன். ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்தேன். ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷ் எனக்கு பெருமளவு வழிகாட்டி உதவினார். அதனால் தான் என்னால் அந்த வெப் தொடரில் நடித்து முடிக்க முடிந்தது”

Right Menu Icon