--- --:--:-- --

பழுதாகி நின்ற டிராக்டர்.. திடீரென வந்து மோதிய கார்..!

9

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பழுதாகி நின்ற டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சிறுபாக்கம் அருகே ஆழி தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் காரில் வீடு திரும்பிய பொழுது இந்த விபத்து நேரிட்டது.

 

காப்பு காட்டு பகுதியில் பழுதாகி நின்ற டாக்டர் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. அதில் படுகாயம் அடைந்த குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon