பழனி கோயிலுக்கு தற்காலிக வாகனம் நிறுத்தம்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை போட்ட உத்தரவு..!
பழனி முருகன் கோயில் பங்குனி திருவிழாவிற்காக நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை பக்தர்களின் வாகனம் நிறுத்துமிடம் வசதிக்காக தேவஸ்தானம் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ள அறநிலையத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக நகராட்சிக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை ஒதுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பங்குனி உத்திர திருவிழாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கிய நீதிபதிகள், விழா முடிந்ததும் நகராட்சியிடம் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





