மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட 13 வயது சிறுமி..சிவகங்கையில் அரங்கேறிய சோகம்..!
சிவகங்கை அருகே மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். 10 வயதான மற்றொரு சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூலி தொழிலாளி வன்னி முத்து என்பவர் 13 வயதான மகள் ஸ்வேதாவும் 10 வயது மகள் வனிதாவும் நேற்று இரவு வீட்டில் மரவள்ளிக்கிழங்கை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அந்த உணவு செரிமானமாகாமல் விஷமாகி ஸ்வேதா உயிரிழந்துள்ளார்.
வனிதா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






