--- --:--:-- --

அழகான ஆண்கள் போட்டோவை வைத்து மேட்ரிமோனியில் மோசடியில் ஈடுபட்ட நபர்..!

10

திருமண தகவல் மையம் மூலம் இரண்டு ஆண்டுகளில் 250 பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை பெங்களூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான நரேஷ் என்பவர் திருமண தகவல் மையங்களில் தனது புகைப்படத்திற்கு பதிலாக அழகான இளைஞர்களின் புகைப்படம் கொடுத்து மறுமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு வலை விரித்துள்ளார்.

 

தான் கம்ப்யூட்டர் இன்ஜினியர் எனக் கூறியவர் பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்து பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

 

அந்த வகையில் கோவையை சேர்ந்த பெண்ணை பெங்களூரு ரயில்வே நிலையத்திற்கு வரவழைத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 750-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon