--- --:--:-- --

திடீரென இபிஎஸ் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்..!

9

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வந்த பொழுது மர்மநபர் ஒருவர் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அவரின் பாதுகாப்பு காவலர்களுடன் உடனடியாக மடக்கி பிடித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

இதனை தொடர்ந்து அந்த மர்மநபர் யார்? எதற்காக வந்தார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தான் சொந்தமாக கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த நிதி கேட்டு வந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon