--- --:--:-- --

10 ரூபாய் நாணயங்களை தயக்கமின்றி வாங்குங்க : சேலம் மாவட்ட ஆட்சியர்

8

பத்து ரூபாய் நாணயங்களை எவ்வித தயக்கமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நடத்துனர்கள் பொது மக்களிடம் இருந்து பத்து ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் அனைத்து தரப்பினரும் 10 ரூபாய் நாணயங்களை எவ்வித இயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பத்து ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு அனைத்து வங்கிகளிலும் ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon