--- --:--:-- --

பணத்தை சுருட்டி விட்டு ஓடிய கள்ளக்காதலி கொடூர கொலை..!

8

திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல், தகராறு தகாத உறவில் இருந்த பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா.

 

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கும் இன்னொரு கிராமத்தைச் சேர்ந்த உறவினர் பழனிச்சாமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. பழனிச்சாமிக்கு சொந்தமான பூர்வீக இடத்தை விற்பனை செய்து அதற்கான முன் பணம் ஐந்து லட்சம் ரூபாய் மல்லிகாவிடம் அவர் கொடுத்துள்ளார்.

 

இந்த நிலையில் பணத்தை கேட்கும் பொழுது கள்ளக்காதலி, மல்லிகா பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்தவர் மல்லிகாவுக்கு மாத்திரை கலந்து கொடுத்து, அவர்அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார்.

 

பின்னர் கொலை செய்த பழனிச்சாமி துறையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மல்லிகாவின் உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon