நீலகிரி வனப்பகுதிக்குள் அத்துமீறல் யூடியூபில் சிக்கிய 3 பேர்..!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் புகுந்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் பாபு.
இவர் உதகையைச் சேர்ந்த பைசல் ரகுமான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோருடன் இணைந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோவை எடுத்துள்ளார். பின்னர் அதனை யூடியூபில் பதிவிட்ட நிலையில் உதகை வனத்துறையினரின் பார்வைக்கு சென்றுள்ளது.
தொடர்ந்து மூவரையும் பிடித்த வனத்துறையினர் தலா 25,000 ரூபாய் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மூவரும் தங்களது தவறுக்கு வருத்தம் தெரிவித்து கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





