--- --:--:-- --

கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சலூன் கடைக்காரர்..!

9

கந்துவட்டி கொடுமையால் சலூன் கடை உரிமையாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டு சோக சம்பவம் திருவாரூரில் நிகழ்ந்துள்ளது. திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சலூன் கடை ஒன்று நடத்தி வந்தார்.

 

கூடூர் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்த பாஸ்கரனை அங்கிருந்த இளைஞர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு முன்பு அவர்கள் எழுதிய கடிதத்தை கைப்பற்றினார்.

 

அதில் திருவாரூர் ரயில்வே காலனியை சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன் இனியன் ஆகியோரிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியதாகவும் 18 லட்சம் ரூபாய் வட்டி கட்டிய நிலையில் கந்துவட்டி மீட்டர் எனக் கூறி மேற்கொண்டு 12 லட்சம் கேட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலைக்கு கோவிந்தராஜன் மற்றும் அவரது மகனே காரணம் என்றும் கடிதத்தில் எழுதி இருந்தது. கணவனின் இழப்பை தாங்க முடியாமல் அவரது மனைவி அழுவது காண்போரை வேதனை அடைய செய்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon