கூலி வேலைக்காக சென்ற பட்டியலின பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த பெண்கள்..!
தர்மபுரி அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலினத்தை சேர்ந்த வயதான பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புவனேஸ்வரன் என்பவர் விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது வேலை செய்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர் கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்துள்ளார். இதை பார்த்து அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிர்ச்சி அடைந்து வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கொட்டாங்குச்சியில் தேநீர் அளித்த இரண்டு பெண்களும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





