கார் விபத்தில் சட்லஜ் ஆற்றில் விழுந்த சைதை துரைசாமி..தேடும் பணி நிறுத்தம்..!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் கார் சட்லஜ் ஆற்றுக்குள் கவிழ்ந்த நிலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
துரைசாமியின் மகன் வெற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது உதவியாளர் கோபிநாத்துடன் ஹிமாச்சல் பிரதேசம் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று வாடகை காரில் கசாயம் என்ற மலைப்பகுதியில் சென்ற பொழுது ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள சட்லஜ் ஆற்றுக்குள் கார் தவறி விழுந்து மூழ்கியது.
அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அளித்த தகவலின் பெயரில் ஹிமாச்சலப் பிரதேச போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநரின் உடலை மீட்டனர். வெற்றி துரைசாமி உதவியாளர் ஆன திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத்தை காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆற்றில் மூழ்கிய வெற்றி துரைசாமி மாயமானதால் அவரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தேடும்படியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி நிறுத்தப்பட்டதாகவும் செவ்வாய் அன்று பணி தொடங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





