--- --:--:-- --

சென்னையில் தள்ளாடி வந்த கார்.. அந்தரத்தில் பறந்த பைக்குகள்..!

10

நுங்கம்பாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் உத்தமன் காந்தி சாலையில் மது போதையில் ஒருவர் தாறுமாறாக காரை ஓட்டி வந்து அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

 

இதில் மூன்று இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அது நவநீதகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon