--- --:--:-- --

14 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்..!

3

நாடாளுமன்ற எம்பிக்கள் 14 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. கடந்த குளிர்கால கூட்ட தொடரில் மக்களவைக்குள் இருவர் நுழைந்து முழக்கங்களை எழுப்பிய பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கேள்வி எழுப்பிய மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 146 எம்.பி.க்கள் அந்த கூட்டத்தொடர் மற்றும் இடைக்கால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 14 எம்.பி.க்கள் விவகாரம் அவை அத்துமீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் சூழலில் எம்பிக்கள் மீதான நடவடிக்கை திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கூட்ட தொடரில் பங்கேற்கலாம் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon