--- --:--:-- --

மனைவி பிரிந்து சென்றதால் ரயில் முன் பாய்ந்த கணவன்..!

9

கிருஷ்ணகிரி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊத்தங்கரை பட்டியைச் சேர்ந்த இளைஞர் தனது மனைவி பிரிந்து சென்றதால் வேதனையிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

சேலம் சென்னை ரயில்வே பாதையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடனே கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அப்பொழுது வேலுசாமியின் மனைவி ஜோதி கணவரின் உடலை கண்டு கதறி அழுதது வேதனை அளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon