சம்பளத்தை கூற மறுத்த கணவர்.. ஆர்டிஐ மூலம் அறிந்து கொண்ட மனைவி..!
மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து மனைவி அறிய உரிமை இருக்கிறது என தகவல் வெளியாக இருக்கிறது. மனைவி ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அவர்களுக்கு இடையில் திருமண வழக்கு நிலுவையில் உள்ளது. இப்பொழுது இந்த பெண் தனது கணவரிடம் இருந்து பராமரிப்பு தொகையை கேட்டுள்ளார். இந்த தொகையை பெறுவதற்கு கணவரின் சம்பள விவரங்கள் குறித்து அந்த பெண்ணிற்கு தேவைப்படும்.
மனைவிக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு தொகையானது மனுதாரர் பெறும் சம்பளத்தை பொருத்தது. மனுதாரரின் சம்பள விவரம் தெரியவில்லை என மனைவி தன் சட்டப்பூர் உரிமையை கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மனைவி தகவல் உரிமை திட்ட கேட்டிருக்கிறார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
இதனால் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் அவரது மனைவி மேல்முறையீடு செய்தார். அந்த இடத்தில் மனைவி கேட்ட தகவலை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. அதற்கு எதிராக கணவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மாநில தகவல் ஆணையம் தகுந்த உத்தரவை தெரிவிக்கிறது என்றும் கணவன் மனைவிக்கு இடையில் திருமண வழக்கு நிலவையில் இருக்கும் பொழுது மனைவிக்கு சில விவரம் தேவைப்படும் மனைவிக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு தொகை மனுதாரர் பெரும் சம்பளத்தை பொருத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





