--- --:--:-- --

காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியதாக உறவினர்கள் வாக்குவாதம்..!

3

புழல் அருகே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற இளைஞரை காவலர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் காவலர்களுடன் வாக்கவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்.

 

இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் நிலையில் காவலர்கள் கண்ணன் மற்றும் மருது ஆகிய இருவரும் விக்னேஷை அடித்து சாலையில் மது அருந்தக்கூடாது என்றும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் கூறியதால் அவர்களுக்குள்ளே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

பின்னர் விக்னேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொழுது அவர் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விக்னேஷின் உறவினருக்கும் சாலையில் அமர்ந்து கொண்டிருந்த விக்னேஷ் காவலர்கள் தாக்கியதால் படுகாயம் ஏற்பட்டதாக கூறி காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon