--- --:--:-- --

விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து கேட்டு தகராறு.. கைகலப்பாக மாறியதால் விபரீதம்..!

5

விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து கேட்டு கணவன் மற்றும் மனைவி வீட்டார் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

 

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரத்குமார், வெங்கடா லட்சுமி தம்பதிக்கு கடந்த 2020 இரண்டாம் ஆண்டு திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்தார்.

 

தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் சரத்குமார் வீட்டிற்கு சென்ற வெங்கடலட்சுமி விவாகரத்து கேட்ட நோட்டீஸில் கையெழுத்து கேட்டுள்ளார். அப்பொழுது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

 

இது தொடர்பாக சரத்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பெண் வீட்டார் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon