பாலமேடு ஜல்லிக்கட்டு – மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்திலும். மாட்டுப்பொங்கலன்று பாலமேடு, மறுநாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம்.
அதன்படி மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாட்டுப்பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுக்காக கடந்த இரண்டு வாரமாக வாடிவாசல் அமைக்கும் பணி அடிப்படை வசதி பணிகள் முழுவீச்சு நடைபெற்றன. பாலமேடு ஜல்லிக்கட்டில் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி 1800 போலீசாருக்கு வைக்கப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





