ஓட்டுநர், நடத்துனர் தற்காலிக இன்டர்வியூவில் கலந்து கொண்ட பெண்..!
கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர் பணிக்கான தேர்வில் நடத்துனர் பணி கேட்டு பெண் ஒருவர் ஆர்வமுடன் பங்கேற்றார்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி பணிமனையில் இருந்து போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் விஜயா என்ற பெண்மணி நடத்துனர் பணி கேட்டு வந்தார். தன்னிடம் ஓட்டுனர் உரிமமும், நடத்துனர் உரிமமும் உள்ளது எனக் கூறியவர் மேலும் தனக்கு நடத்துனர் பணி வழங்கினால் பயனாக இருக்கும் என தெரிவித்து நிரந்தரமாக பணி கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.





