இன்று எங்கெங்கு பேருந்துகள் இயக்கம் குறைவு..?
திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. திருவள்ளூர் பணிமனையில் உள்ள 59 பேருந்துகளில் 40% பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு பணிமனைகளில் இருந்து 75 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதுக்கோட்டை நகர் பகுதியில் காலை 6 மணி நிலவரப்படி 90% பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் வழக்கத்தை விட 30 சதவீதம் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எஸ்இடிசி பேருந்துகள் 90 சதவீதம் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 96 சதவீதம் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணி ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம், பரமக்குடி பணிமனையில் இருந்து 50% பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்து மேலாண் கழக இயக்குனர் ஆய்வு ஐயப்பன் தாங்கல் பணிமனையில் அரசு போக்குவரத்து மேலான் கழக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரியில் வழக்கம் போல் பேருந்து இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் 6.30 நிலவரப்படி அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 38 பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம்போல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து வழக்கமாக 27 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 11 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் 137 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 82 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் ஓட்டுநர். நடத்துனர் தயாராக இருந்தும் தின கூலி அடிப்படையில் பணி செய்வவதற்காக 40 பேர் தயார் நிலையில் உள்ளனர். தூத்துக்குடியில் வழக்கமாக 50 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 49 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு பணிமனைகளில் இருந்து புறநகர் மற்றும் நகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. நெல்லை, வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் பணிமனையில் இருந்து வெளிவரும் பேருந்துகளை மறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளை மறித்தவர்களை போலீசார் கலைந்து போக சொன்னதையடுத்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஈரோடு காசி பாளையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்து பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் காலை 6:00 மணி நிலவரப்படி வழக்கம்போல் 100% பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
கடலூர் பண்ருட்டி பணிமனையில் இருந்து வழக்கம் போல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருக்கோவிலூரில் 70% பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென்காசியில் 75 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
தென்காசி செங்கோட்டை புளியங்குடி சங்கரன்கோவில் பணிமனைகளில் இருந்து திருவள்ளூர் பணிமனையில் உள்ள 509 பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து காலை 6.30 நிலவரப்படி 60 சதவீதம் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற பேருந்துகள் 75 சதவீதம் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.இதனால் மக்கள் சிரமம் இன்றி பயணித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள 7 பணிமனையில் இருந்து 75% பேருந்துகள் வழக்கம் போல இயக்கக்கப்படுகிறது.
புதுக்கோட்டை நகர் பகுதியில் 90% பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகிறது. சென்னையில் போராட்டம் படுதோல்வியை சந்தித்துள்ளது. சென்னையில் வழக்கமாக இயங்கும் பேருந்தை விட கூடுதலாக இன்று பேருந்துகள் இயக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




