போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மாடியில் இருந்து குதித்ததால் அதிர்ச்சி..!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காளீஸ்வரன்.
இவர் பெண் ஒருவரை கேளி செய்த புகாரில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவரப்பட்டிருக்கிறார். அப்பொழுது காவல் நிலையத்தில் மாடிக்கு ஓடிய காளீஸ்வரன் அங்கிருந்து குதித்து தற்கொலைக்கும் முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படுகாயம் அடைந்த இளைஞரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இது குறித்து காவல்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





