--- --:--:-- --

அதிகாரிகளை விரட்டி விரட்டி கடித்த நாய்.. தீவிரமாக தேடும் பணியில் ஊழியர்கள்..!

6

நெல்லை வணிகவரித்துறை அலுவலகத்தின் பொது மேலாளர் காவலாளி உட்பட எட்டு பேரை அடுத்தடுத்து தெரு நாய்கள் கடித்ததால் காயம் அடைந்தனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த நாய் அலுவலகத்திற்கு வந்தவர்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது.

 

அலுவலக மேலாளர், அலுவலக காவலாளி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்டோரை கடித்ததால் அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஊழியர்கள் அங்கிருக்கும் நாய்களை தேடி தேடி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல் அந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்திலும் நாய்கள் தொல்லையால் ஏற்கனவே இருவர் காயம் அடைந்துள்ளனர்.

 

Right Menu Icon