குட்டையில் இருந்த முதலை மாயம்.. தேடும் பணியில் வனத்துறையினர்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குட்டியுடன் பதுங்கி இருந்த முதலையைப் பிடிக்க தண்ணீரை வனத்துறையினர் முழுமையாக வெளியேற்றிய நிலையில், நீரில் இருந்த மீன்களை கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பிடித்து சென்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் மழை நீரை சேகரிப்பதற்காக தடுப்பணைகளில் குட்டை ஒன்று உள்ளது. அண்மையில் பெய்த மழையால் குட்டையில் தண்ணீர் நிரம்பிய நிலையில் அதில் முதலை இருப்பதாக வனதுறையினருக்கு கிராம மக்கள் தெரிவித்தனர்.
அதன்படி முதலையைப் பிடிக்க குட்டையின் கரைகளில் வலையை பிடித்த வனத்துறையினர் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மின்மோட்டார் உதவியுடன் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் குட்டையில் முதலை இல்லாதது தெரிய வந்தது. மீன்களை கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர்.





